சீனாவுக்கான விமான சேவை குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான விமான சேவைகளை ஆரம்பிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய தமது விமான சேவைகளை வாரத்திற்கு மூன்று முறை மீண்டும் ஆரம்பிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
மீண்டும் திறக்கப்படும் சீன எல்லை
சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்த நிலையில், சீனாவுக்கான வணிக விமானச் சேவைகளை ஏப்ரல் 2023 முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவில் குவாங்சூ ,பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய இடங்களுக்கு விமான சேவைகள் மீண்டும ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கன் தற்போது கொழும்பு மற்றும் குவாங்சூ இடையே வாராந்திர விமானத்தை இயக்குகிற நிலையில், இரண்டாவது விமான சேவையை மார்ச் 4 ஆம் திகதி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, வாரத்தின் ஒவ்வொரு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கொழும்பிலிருந்து குவாங்சோவுக்கான விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் குவாங்சோவிலிருந்து கொழும்புக்குத் திரும்பும் விமானங்கள் ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படவுள்ளன.

பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் விமான சேவைகள்
மேலும் கொழும்பில் இருந்து பெய்ஜிங்கிற்கான விமான சேவைகள் ஏப்ரல் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெய்ஜிங் நோக்கி புறப்படவுள்ளது.
கொழும்பு திரும்பும் விமானங்கள் குறித்த தினத்திற்கு மறுநாள் இயக்கப்படவுள்ளன.
இதேவேளை வார நாட்களில் திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொழும்பில் இருந்து ஷாங்காய்க்கு விமானங்கள் புறப்படும் மற்றும் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் முறையே ஷங்காயிலிருந்து கொழும்புக்கு விமானங்கள் புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam