மூன்று நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அந்த அடிப்படையில் குறித்த மூன்று நாட்களிலும் A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலய பகுதிகளுக்கு முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வலய பகுதிகளில் மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் கொழும்பு நகர்ப்பகுதியில் காலை 6 மணிமுதல் 9 மணி வரையான காலப்பகுதியில் 3 மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்தவும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.