தென்மேற்கு பருவமழை தீவிரம்: மறு அறிவிப்பு வரும் வரை வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு
மன்னாரிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கலாம் என்பதால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் காற்றின் நிலை தொடரும்
நாட்டில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri