க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல்
இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாத, 17ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த மாணவர்கள் ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk என்ற தளத்திற்கு சென்று, குறித்த விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திறக்கப்படும் அலுவலகம்
ஏதேனும் பரீட்சார்த்திகள் இருப்பின், அவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக மாத்திரம் நாளை (14.02.2026) ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலக கிளைகளை முற்பகல் 08.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை திறந்து வைக்கவும் அத்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத, இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரிகள் எவரேனும் இருப்பின், அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரினால் சான்றளிக்கப்பட்ட, முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய ஆவணங்களுடன் வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri