நீர் வெட்டு தொடர்பில் கிளிநொச்சி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கான நீர் வெட்டு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை(20) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் அறிவித்துள்ளனர்.
பூநகரி

பூநகரி வாடியடிச் சந்தியில் அமைந்துள்ள நீர்த் தாங்கியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தம் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் மறு நாள் செவ்வாய் கிழமை(21) காலை 6 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான கோரிக்கை

எனவே பொது மக்கள் இதனை கருத்தில்
கொண்டு முன்னாய்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri