எரிவாயு விநியோகம் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
நாட்டுக்கு வந்துள்ள கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் 3,500 மெட்ரிக் டன் எரிவாயுவை விநியோகம் செய்யும் முறை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, முதற்கட்டமாக வைத்தியசாலைகள், உணவகங்கள், தகன சாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தால் எரிவாயு கப்பல் தல்தியவத்தை கடற்பரப்பில் ஆறு நாட்களாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று பணம் செலுத்தப்பட்டதன் பின்னர் இன்று (14) எரிவாயு மிதவைகள் ஊடாக முத்துராஜவெல லிட்ரோ முனையத்திற்கு கொண்டு செல்லும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கப்பலில் இருந்து எரிவாயு தரையிறக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.



