பொதுமக்களுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள அறிவிப்பு
சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களைப் பின்பற்றி மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிகால் தல்துவ தெரிவித்துள்ளார்.
காவல்துறை தலைமையகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.
கோவிட் தடுப்பு தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக நேற்றைய தினம் இலங்கை பூராகவும் 63 பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்த வகையில் நாட்டில் இதுவரை 81809 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது குறைந்துவருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் அசமந்தப் போக்கும் காணப்படுகின்றது. நாடு வழமைக்குத் திரும்பவும், மக்கள் சுதந்திரமாக நடமாடவும், மக்கள் வழிகாட்டல்களை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
