இராணுவத்தினருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை-செய்திகளின் தொகுப்பு
விடுமுறை அல்லாது சேவைக்கு சமுகமளிக்காமல் தற்போது வெளிநாடுகளில் இருக்கும் இராணுவ உறுப்பினர்களுக்கு, சட்டபூர்வமாக சேவையிலிருந்து விலகுவதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் ஒக்டோபர் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான காலப்பகுதியில் விடுமுறை அல்லது சேவைக்கு சமுகமளிக்காத இராணுவ வீரர்களுக்காக மாத்திரம் இந்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு பயணிக்காமை அல்லது வௌிநாடு செல்லும் போது கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்கள் மோசடியாக தயாரிக்கப்படவில்லை என்பன குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,