ஜுலை முதல் அதிக நிதி! குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கான அறிவிப்பு
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக முன்னெடுக்கப்படும் அஸ்வெசும உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கான நிதி அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது நாடாளுமன்றில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வறுமையை போக்கும் விசேட வேலைத்திட்டங்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வறுமையை போக்குவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
அஸ்வெசும உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு ஜுலை மாதம் முதல் அதிக நிதி ஒதுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், 2025ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
