இலங்கையில் பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
இலங்கையில் டீசல் பயன்படுத்தும் பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தொடர்ந்து தேவையில்லாமல் டீசலை சேமிக்கும் பட்சத்தில் டீசல் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுமக்களின் இந்த செயற்பாடு கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு வழிவகுக்கும். தேவையில்லாமல் டீசலை பதுக்கி வைப்பதை உடனடியாக தடுக்க வேண்டும்.
எரிபொருளை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் உள்ள போதிலும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினை காரணமாக டீசல் இறக்குமதியில் பிரச்சினை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொது மக்கள் எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசைகளில் நிற்பதை தொடர்ச்சியாக அவதானிக்க முடிகிறது.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
