இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்தவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு
கோவிட்டுக்கான புதிய மருந்துகளைக் கண்டுபிடித்தமை தொடர்பில் எவராவது உரிமை கோருவதற்கு முன்னர், அந்த மருந்துகளைத் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பீடு செய்து ஒப்புதல் பெற வேண்டும் என தமது சபையின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ளது.
இந்த அறிவுறுத்தலுக்கு இணங்கத்தவறும் பயிற்சியாளர்கள் மீதான மருத்துவ பொருத்தமான ஒழுக்காற்று கட்டளையின்கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று இலங்கை மருத்துவ சபை எச்சரித்துள்ளது.
எனவே அத்தகைய கூற்றுக்களுக்கு விளம்பரம் வழங்குவதற்கு முன்னர் அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதா என்பதை தமது ஆணையகத்துடன் சரிபார்த்துக் கொள்ளுமாறு இலங்கை மருத்துவ சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இத்தகைய கூற்றுக்கள் குறித்து பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் கேள்விகள்
இருந்தால் தமது மின்னஞ்சலுக்கு (president@mc.lk) எழுதலாம் என்று இலங்கை
மருத்துவ அறிவித்துள்ளது.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan