தொடர்ந்தும் பாதிக்கப்படும் காணாமல் போனவர்களின் ஆயிரக்கணக்கான குடும்பங்கள்: செஞ்சிலுவைச் சங்கம் தகவல்
காணாமல் போன தமது அன்புக்குரியவர்களின் தலைவிதியின் நிச்சயமற்ற தன்மை காரணமாக இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து சமூகங்களையும் சேர்ந்த காணாமல் போனவர்களின் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் (30.08.2023) வரும் காணாமல் போனவர்களின் சர்வதேச தினத்தைக் குறிக்கும் வகையில் ஐ.சி.ஆர்.சி வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்;பிடப்பட்டுள்ளது.
ஆயுத மோதல்கள் மற்றும் பிற வன்முறைச் சூழ்நிலைகள் காரணமாக உலகெங்கிலும் உள்ள நூறாயிரக்கணக்கான மக்களைக் காணவில்லை அல்லது தங்கள் குடும்பங்களை விட்டு அவர்கள் பிரிந்துள்ளனர்.
ஒருவர் காணமல் போனால், தமது அன்புக்குரியவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்று தெரியாமல் தொடர்ந்து தெளிவற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு அது வேதனையையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது.
உறவினர்களுக்கு என்ன நடந்தது?
காணாமல் போனவர்களின் பல குடும்பங்களுக்கு, அவர்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவது மிகவும் அவசியமான தேவையாகும். பெரும்பாலான சூழ்நிலைகளில், காணாமல் போனவர் பெரும்பாலும் குடும்பத்தை ஆதரிப்பவராக இருந்திருப்பார்.
இதன்போது குறித்தவரின் குடும்பர் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும். காணாமல் போன அவர்களது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய மக்களுக்கு உரிமை உண்டு.
இந்தநிலையில் காணாமல் போனவர்களின் தலைவிதி மற்றும் இருப்பிடத்தை கண்டறியும் முயற்சிகளுக்கு தகவல்களை வழங்குவதற்கும் உதவுவதற்கும் அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
நிச்சயமற்ற தன்மை
எனவே காணாமல் போனவர்களைத் தேடுவதற்கும், அவர்களின் தலைவிதி மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் இருப்பிடம் குறித்த தனிப்பட்ட பதில்களை வழங்குவதற்கு முயற்சிகள் அவசியமாகின்றன.
இந்த மனிதாபிமான துயரத்திலிருந்து இலங்கை இன்னும் விடுபடவில்லை.
2023 ஆம் ஆண்டிலும், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சமூகங்களிலிருந்தும்
காணாமல் போனவர்களின் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், காணாமல் போன தங்கள்
அன்புக்குரியவர்களின் தலைவிதியைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையால் தொடர்ந்து
பாதிக்கப்படுகின்றனர் என்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 41 நிமிடங்கள் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
