இன்னுமொரு இனத்தின் நியாயமான, நீதியான எந்த கோரிக்கையினையும் நாங்கள் தட்டிப்பறிக்கவில்லை: வியாழேந்திரன்(Video)

Politics Batticaloa People Vijalenthiran
By Kumar Dec 31, 2021 02:28 PM GMT
Report

எங்களது அரசியல் அதிகாரத்தினைக் கொண்டு இன்னுமொரு இனத்தின் நியாயமான,நீதியான எந்த கோரிக்கையினையும் நாங்கள் தட்டிப்பறிக்கவில்லை. அதேபோன்று எமது சமூகத்திற்கு தரவேண்டிய நீதியான நியாயமான எந்தவொரு கோரிக்கையினையும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று அரசியல் அதிகாரம் கைகளில் உள்ளதன் காரணமாகவே சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தமுடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழ்வாதார உதவிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் புனரமைப்புக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற்றது.


ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஊடாக இந்த நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதன்கீழ் வறிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக 59குடும்பங்களுக்கு ஆடுகளை வழங்குவதற்கு 18இலட்சம் ரூபாவும், 12குடும்பங்களுக்கான வீடுகள் திருத்துவதற்காக 26இலட்சம் ரூபாவும், மூன்று விளையாட்டு மைதானங்களைப் புனரமைப்பதற்காக 15இலட்சம் ரூபாவும், 18குடும்பங்களுக்கு மலசலக் கூட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக 12இலட்சத்து 60ஆயிரம் ரூபாவும், மிகவும் வறிய நிலையில் உள்ள 18 குடும்பங்கள் மின்சாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக 04இலட்சத்து 16ஆயிரம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கான நிதிகள் மற்றும் ஆடுகள் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் க.சுதாகர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவற்றினை வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சபேசன், அமைச்சரின் பிரதேச இணைப்பாளர் நிரோஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

கடந்த மூன்று தசாப்ததுக்கு மேற்பட்ட காலமாக ஆளுந்தரப்பில் தமிழ் மக்கள் சார்பாக மக்கள் பிரதிநிதிகள் இருந்தது என்பது மிகவும் அரிதான விடயமாகும். அதனால் கடந்த காலத்தில் அரசியல் அதிகாரம் இல்லாத சமூகமாகவே நாங்கள் இருந்துவந்துள்ளோம்.

அந்த அரசியல் அதிகாரம் இல்லாத காரணத்தினால் தமிழ்ச் சமூகம் பல வழிகளில் சுரண்டப்பட்டுள்ளது. அதிகாரிகள் இன்று இரவு பகல் பாராமல் தங்களது வேலை நேரக்கடமைக்கு அப்பால் சென்று விடுமுறைகள் என்று பாராமல் எந்தவித இனவாத, மதவாத நோக்கமில்லாமல் உளச்சுத்தியுடன் கடமையாற்றிவரும் நிலையில் மாவட்ட அரசாங்க அதிகாரிகளை அரச பயங்கரவாதம் என்று சொல்கின்ற கீழ்த்தரமான அரசியலைச் சிலர் மேற்கொள்கின்றனர்.

அரசியல் அதிகாரம் என்பது இன்று எங்களது கைகளிலும் இருக்கின்றது. அதன்காரணமாகவே இன்று எமது சமூகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை முடிந்தளவுக்குத் தடுத்து நிறுத்திவருகின்றோம்.

ஆளுந்தரப்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தமிழ் மக்கள் கொண்டுவந்துள்ளார்கள். இந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கான மூன்று விதமான பிரச்சினைகள் உள்ளன.இந்த மூன்று விதமான பிரச்சினைக்கும் இராஜதந்திரமான அணுகல்களை மேற்கொண்டு தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதே எங்கள் அரசியல் பயணமாகும்.

இதில் எந்தவித மாற்றுக்கருத்துகளுக்கும் இடமில்லாமல் மிகவும் தெளிவாகியிருக்கின்றோம். இன்று பாதுகாப்புப் படையினர் வசமிருக்கின்ற காணிகள் விடுவிக்கப்படுகின்றது.

உடனடியாக தீர்க்கப்படவேண்டிய பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. அரசாங்கத்துடன் நாங்கள் இருந்து ஜனாதிபதியுடன் பிரதமருடன் தொடர்புடைய அமைச்சுகளுடன் பேசி ஒவ்வொரு பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை காத்திரபூர்வமாக முன்னெடுத்து படிப்படியாக மேற்கொண்டுவருகின்றோம்.

மூன்று தசாப்தமாக விடுவிக்கப்படாத கும்புறுமுலை இராணுவமுகாம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. எங்களது அரசியல் அதிகாரத்தினைக்கொண்டு இன்னுமொரு இனத்தின் நியாயமான,நீதியான எந்த கோரிக்கையினையும் நாங்கள் தட்டிப்பறிக்கவில்லை.

அதேபோன்று எமது சமுகத்திற்குத் தரவேண்டிய நீதியான நியாயமான எந்தவொரு கோரிக்கையினையும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. தமிழ் எம்பிக்கள் 16பேர் முட்டுக்கட்டை கொடுத்துப் பாதுகாத்த நல்லாட்சிக் காலத்தில் ஒரு தமிழ் அரசியல் கைதியை பொது மன்னிப்பில் விடுவிக்கமுடியவில்லை.ஆனால் தற்போதைய ஜனாதிபதி ஒரே தடவையில் 16 அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவித்தார் என தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US