கட்டாகாலியான அரசாங்கத்தின் அமைச்சருடன் விவாதம் நடத்த தயாரில்லை!எதிர்க்கட்சித் தலைவர்
கட்டாகாலியாக இருக்கும் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருடன் விவாதம் நடத்த தான் தயாரில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உங்களை விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் பந்துல குணவர்தன சவால் விடுத்துள்ளார் அல்லவா” என கயந்த கருணாதிலக்க, எதிர்க்கட்சித் தலைவரிடம் வினவியுள்ளார்.
2 ஆயிரத்து 500 ரூபாய் ஒரு நபர் ஒரு மாதம் ஜீவிக்கலாம் என பந்துல குணவர்தன சில காலங்களுக்கு முன்னர் கூறியதை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த கலந்துரையாடலின் போது நினைவூட்டியுள்ளார்.