மின்வெட்டு நீக்கம் குறித்து உறுதியாக கூற முடியாது: ஜானக ரத்நாயக்க

Power cut Sri Lanka Sri Lanka Ceylon Electricity Board
By Aanadhi Jun 22, 2022 11:46 AM GMT
Report

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் இன்னும் இரண்டரை மாதங்கள் வரையான காலப்பகுதிக்கு முழுவீச்சில் செயற்பட முடியாத தடங்கலை எதிர் கொண்டுள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை முழு கொள்ளளவுடன் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க இன்னும் 75 நாட்கள் ஆகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு நீக்கம் குறித்து உறுதியாக கூற முடியாது: ஜானக ரத்நாயக்க | Not Possible To Say Sure About The Power Outage

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், “எரிபொருளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அதிக அளவு எரிபொருள் தேவைப்படுவதாக அவர் சுட்டிக்கட்டியுள்ளார்.

மேலும், மின் உற்பத்தி நிலையத்திலுள்ள இரண்டாவது ஜெனரேட்டர் கட்டாய பராமரிப்புக்காக கடந்த சனிக்கிழமை நிறுத்தப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னணி

1995 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபையினால் (CEB) நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டது. கட்டுமானம் 2007 இல் தொடங்கி மூன்று கட்டங்களாக முடிக்கப்பட்டு செப்டம்பர் 2014 இல் நிறைவடைந்துள்ளது.

இதன் மொத்த மின் உற்பத்தி 900 மெகாவால்ட் ஆகும். எவ்வாறாயினும் இந்த ஆலை அடிக்கடி மூடப்படுவதால் நாட்டில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மின்வெட்டு நீக்கம் குறித்து உறுதியாக கூற முடியாது: ஜானக ரத்நாயக்க | Not Possible To Say Sure About The Power Outage

(CMEC) அனல் மின் நிலையத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்ட தடவைகள் பழுதடைந்துள்ளதாகவும், இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பு பாரியளவானது என்றும் கூறப்படுகிறது.

மின்சார சபை அதிகாரிகளின் கூற்றுப்படி, அக்டோபர் 2010 இல் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதற்கு நிலக்கரி எரித்த பின் கழிவுகளை வெளியேற்றும் புகைபோக்கியில் ஏற்பட்ட அடைப்பே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

மின்வெட்டு நீக்கம் குறித்து உறுதியாக கூற முடியாது: ஜானக ரத்நாயக்க | Not Possible To Say Sure About The Power Outage

தீ விபத்து கட்டுமானப் பணிகளைச் சீர்குலைக்கவில்லை என்றாலும், அதன் தாக்கம் குறையவில்லை. மீண்டும் ஜூலை 22, 2012 அன்று, கொதிகலன்களுக்கு இடையே தண்ணீர் செல்லும் ஆயிரக்கணக்கான குழாய்களில் ஒன்றில் கசிவு ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளது.

மற்றொரு சந்தர்ப்பத்தில், ஜனவரி 29, 2013 அன்று, மின் உற்பத்தி நிலையம் அதன் திட்டமிடப்பட்ட 300 மெகாவால்ட் அளவைத் தாண்டியது, இதனால் மின் உற்பத்தி நிலையம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

மின்வெட்டு நீக்கம் குறித்து உறுதியாக கூற முடியாது: ஜானக ரத்நாயக்க | Not Possible To Say Sure About The Power Outage

ஜனவரி 12, 2014 அன்று, ஆலையில் நீராவி கசிவு கண்டறியப்பட்டு மின் உற்பத்தி நிலையம் ஆறு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. மீண்டும் தொடங்கப்பட்ட ஒரு நாள் கழித்து, பழுதுபார்க்கப்பட்ட மின்தேக்கியில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின் உற்பத்தி நிலையம் 26-வது முறையாக மூடப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

செலவு

மின்வெட்டு நீக்கம் குறித்து உறுதியாக கூற முடியாது: ஜானக ரத்நாயக்க | Not Possible To Say Sure About The Power Outage

கடந்த 24 நாட்களில் நான்கு முறை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடிக்கடி மூடப்படுவதால் மாற்று டீசல் எரிசக்தியை கொள்வனவு செய்வதற்கு மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 3.3 மில்லியன் டொலர்கள் செலவழிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைக்கு பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ள இந்த மின் உற்பத்தி நிலையம் மீண்டும் முழு வீச்சில் செயற்பட இரண்டரை மாதங்கள் வரையான காலபகுதியை தாண்டும் என்று கூறப்படுகின்றது. அதுவரை மின்வெட்டு நீக்கம் குறித்து உறுதியாக கூற முடியாது“. என அவர் தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US