நாளை முதல் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை! - பிரான்ஸ் அரசு அறிவிப்பு
நாளை முதல் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, நாளை முதல் வெளியில் செல்பவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரான்சில் அமுலில் இருக்கும் கோவிட் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 20ம் திகதி முதல் தளர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், ‘
“நாங்கள் எதிபார்த்ததைவிட நாட்டில் சுகாதாரநிலை முன்னேற்றம் கண்டுள்ளது.” எனவே, அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரான்சில் நேற்றைய தினம் நாளாந்த கோவிட் பாதிப்பு 3200 ஆக பதிவாகியது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
முன்னதாக, பிரான்ஸ் கோவிட் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்த மாதம் கடைசி வரை ஊரடங்கை அமுல்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam