ராஜபக்சர்களுக்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு: மகிந்தவின் நிலைப்பாடு
பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டோரே காரணம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் இவர்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக குறித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடிக்கு தானும் அரசாங்கத்தில் உள்ள பலருமே பொறுப்பு என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கப் போவதில்லை.
அதற்கான காரணங்களை நாம் வாய்ப்பு கிடைக்கும் போது விளக்கமளிப்போம். கட்சியின் அடுத்த மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்படும்.
அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

வெல்லம்பிட்டி பாடசாலையில் நேர்ந்த அனர்த்தம்! கல்வி அமைச்சரின் பணிப்புரை - இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி நடவடிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
