ஐரோப்பாவிலிருந்து இலங்கை வந்த இளம் பெண்ணுக்கு ஹோட்டலில் நேர்ந்த துயரம்
இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு சுற்றுலா பெண் ஒருவர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிகம ஹோட்டல் ஒன்றில் வைத்து ஸ்பெயினை சேர்ந்த குறித்த பெண்ணை தகாத முறைக்கு உட்படுத்திய மற்றுமொரு வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் 38 வயதுடைய நோர்வே நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா பயணம்
29 வயதான ஸ்பெயின் பெண், சுற்றுலா பயணம் மேற்கொண்டு இலங்கை வந்து வெலிகமவின் பெலேன பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்தார்.
அதே ஹோட்டலில் தங்கியிருந்த நோர்வே நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர், தன்னை தனது அறைக்கு அழைத்துச் சென்று தகாத முறைக்கு உட்படுத்தியதாக இளம் பெண் வெலிகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை
சம்பவம் நடந்தபோது சுற்றுலா பயணியான பெண் மது அருந்தியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
எனினும் சந்தேக நபரான நோர்வே நாட்டவரை வெலிகம பொலிஸார் கைது செய்து மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
