வடக்கு தமிழ் மக்களின் வாக்குகள் சஜித்துக்கே!.. ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே வடக்கு மாகாண தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அலை இருக்கின்றது எனக் கூறப்பட்டாலும் தற்போதுள்ள வாக்கு வங்கியை விட சற்று கூடுதல் வாக்கு அந்தக் கட்சிக்குக் கிடைக்கும்.
செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாக்கு வங்கி 10 விகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
வடக்கில் எமக்கே ஆதரவு உள்ளது. இனவாதக் கட்சிகளுக்கு அந்த மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். எமது அணியில் இனவாதிகள் இல்லை. சஜித் இனவாதம் அற்ற தலைவர்.
அனைத்து இனத்தவர்களும் அங்கம் வகிக்கக் கூடிய கட்சி எமது கட்சியாகும். அதேவேளை, அடுத்து என்ன தேர்தல் நடத்தப்பட்டாலும் கூட்டணியாக எதிர்கொள்வதற்கு செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
