வடக்கு மாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல்
வடக்கு மாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல் யாழ். நகரில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் வவுனியா ஆகிய 05 மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாவுடன் தொடர்புடைய உரிமையாளர்களினாரல் குறித்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது இடம்பெற்ற நிர்வாகத் தெரிவில் வலம்புரி மற்றும் கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியின் உரிமையாளர் தி.ஜெகசீலன் தலைவராகவும் D Villa உரிமையாளர் A.டிலான் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலாத்துறை ஒன்றியம்
மேலும், வடக்குமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியம் என்பது வடமாகாணத்தில் உள்ள சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையோடு தொடர்புபட்ட ஏனைய அமைப்புகளையும் இணைத்து செயற்படுகின்ற ஒரு பொது அமைப்பாகும்.
அத்தோடு, வடக்குமாகாண சுற்றுலாத் துறையினை வளமான சுற்றுலாத்துறையாக மேம்படுத்துவதுடன் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதும் இவர்களது பிரதான பணியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
