வட மாகாண இலங்கை போக்குவரத்து சபை தொழிலாளர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு
வடமாகாண ஆளுநரின் செயற்பாடு தொடர்பில் வட மாகாண இலங்கை போக்குவரத்து சபை தொழிலாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
வட மாகாண இ.போ.ச தொழிலாளர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சபை சாலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
அதிருப்தி தரும் முடிவு
அவர்கள் மேலும் கூறுகையில், கடந்த 21ஆம் திகதி ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின் எடுத்த முடிவு, அதிருப்தி அளிப்பதுடன் இது தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை தங்களுக்குள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த 21ஆம் திகதி ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்த கருத்து, எமது கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை தனியாகவும் சுதந்திரமாகவும், கடந்த 54 வருட காலமாக சொந்த இடத்திலிருந்து கடமையாற்றிக் கொண்டு உள்ளது. இலங்கை போக்குவரத்து சபை பொதுமக்களுக்கு இதுவரை எந்தவிதமான இடையூறுகளையும் விளைவிக்கவில்லை.
தனியார பேருந்துகளுக்கு ஆதரவான நிலைப்பாடு
அரசாங்க அதிபரின் செயற்பாடு தனியாருக்கு தேவை பார்ப்பதாக உள்ளது. ஒவ்வொரு ஆளுநர்கள் ஒவ்வொரு அரசாங்கங்கள் ஒவ்வொரு அரசு அதிபர்கள் மாற மாற, பேருந்து நிலையத்தை இயக்க வைப்பதற்கு நாங்கள் அவர்களிடம் செல்கின்றோம்.
ஆனால் அவர்களின் நிலைப்பாடு தனியார் பேருந்துகளுக்கு ஆதரவாக உள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் செயல்பாட்டை முடக்கி, தனியாக தனியாக உடன் இணைக்கப்படுகின்ற செயற்பாட்டை வடக்கு மாகாண போக்குவரத்து தொழிலாளர் சங்கம் இதனை வன்மையாக கண்டிக்கின்றது.
ஆதாரம்
எங்களுக்கான பேருந்து நிலையம் எங்களிடம் இருக்கும் பொழுது புதிதாக ஒரு பேருந்து நிலையத்தில் கடமையாற்றிய கடமை ஆற்ற வேண்டியது எங்களுக்கு இல்லை இவ்வாறு தெரிவித்தார் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண ஒருங்கிணைப்பு செயலாளர் கோபி கிருஷ்ணன்.
எங்களுக்கான பேருந்து நிலையம் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. எங்களுடைய பேருந்து நிலையத்தை சுயமாகவும் எங்களுடைய அடையாளத்துடன், தனித்துவமாக செயலாற்றவே நாங்கள் விரும்புகின்றோம்.
ஆளுநரின் தன்னிச்சையான செயற்பாட்டை, எங்களுடன் கலந்துரையாடல், வேறு அமைப்புகளுடன் கலந்துரையாடிய செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



