வடக்கில் மாணவர்களுக்கு ஏற்றப்பட்ட பைஸர் தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்

COVID-19 COVID-19 Vaccine Jaffna Northern Province of Sri Lanka
By Rakesh Sep 15, 2022 06:19 AM GMT
Report

வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு காலாவதியான பைஸர் தடுப்பூசிகளே ஏற்றப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், சுகாதார அமைச்சின் தடுப்பூசி தொடர்பான ஆலோசனைக் குழுவின் சிபாரிசின் அடிப்படையிலேயே தடுப்பூசி ஏற்றப்படுகின்றது என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

காலாவதியான தடுப்பூசிகள் 

வடக்கில் மாணவர்களுக்கு ஏற்றப்பட்ட பைஸர் தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல் | Northern Province Of Sri Lanka Covid Vaccine

தற்போது வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன. இதன்போது 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் காலாவதியான தடுப்பூசிகளே மாணவர்களுக்கு ஏற்றப்படுகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், காலாவதியான இந்தத் தடுப்பூசிகளை 2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரையில் ஏற்றுவதற்கு அதிகாரிகளால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய கடந்த (13.9.2022) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இந்தத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு இந்தத் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன என்றும் தெரியவருகின்றது.

வடக்கின் ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் இந்தத் தடுப்பூசிகளே ஏற்றப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்து  

வடக்கில் மாணவர்களுக்கு ஏற்றப்பட்ட பைஸர் தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல் | Northern Province Of Sri Lanka Covid Vaccine

இது தொடர்பாக மாணவர்களுக்கோ, பெற்றோர்களுக்கோ சுகாதாரத் துறையால் எந்த விளக்கமும் இதுவரை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்ததாவது, 

"இந்தத் தடுப்பூசியே நாடு முழுவதும் ஏற்றப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சின் தடுப்பூசி தொடர்பான ஆலோசனைக் குழுவின் பரிந்துரையுடனேயே காலாவதியான தடுப்பூசியை பயன்படுத்தும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தடுப்பூசிகளை 2022 ஒக்டோம்பர் 31 ஆம் திகதி வரை பாவனைக்குட்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

"காலாவதியாகி சில மாதங்கள் கடந்த பின்னரான தடுப்பூசிகள் செலுத்தப்படுவதால் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படதா" என்பது தொடர்பில் வினவிய போது,  "நாடு முழுவதும் இந்தத் தடுப்பூசியே செலுத்தப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விவரங்களை நீங்கள் சுகாதார அமைச்சிடம் தான் கேட்க வேண்டும்" என்று அவர் பதிலளித்துள்ளார். 

அதேவேளை, ஏனைய மாகாணங்களில் சிலவற்றில் இந்தத் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும், அதிகாரிகளின் எதிர்ப்பால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது என்று அறியமுடிகின்றது. 

6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US