வவுனியா வடக்கில் சிறப்பாக இடம்பெற்ற வடக்கு மாகாண புத்தாண்டு விழா
வடக்கு மாகாணத்தின் சித்திரை புத்தாண்டு விழா வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று(16.04.2024) வவுனியா - வடக்கு நெடுங்கணி மகாவித்தியாலய மைதானத்தில் நடைப்பெறுள்ளது.
இதன்போது பாரம்பரிய முறையில் விருந்தினர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றதோடு, தமிழ் சிங்கள கலை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுக்கள், மறைந்து செல்லும் தமிழர் பாரம்பரிய கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள், பாரம்பரிய உணவு கண்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் வவுனியா மாவட்டச் செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன், அரச அதிகாரிகள், வவுனியா வடக்கு கல்வி வலய அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.