ஊடகங்கள் அதன் தாற்பரியம் அறிந்து செயற்பட வேண்டும்: வடக்கு மாகாண ஆளுநர் செயலகம்

Jaffna Northern Province of Sri Lanka P. S. M. Charles
By Theepan Apr 24, 2024 02:37 PM GMT
Report

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகங்கள் அதன் தாற்பரியம் அறிந்து செயற்பட வேண்டுமே தவிர தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களின் துணைகொண்டு சாதித்துக்கொள்ள நினைப்பது நீதியான செயற்பாடு அல்லவென வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பால் மா விலைகள் தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

பால் மா விலைகள் தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

ஆசிரியர் தலையங்கம்

மேலும் அந்த அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் வெளிவரும் பத்திரிகையொன்றில் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி பிரசுரமாகிய ஆசிரியர் தலையங்கம் தொடர்பில், ஆளுநர் செயலகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

ஊடகங்கள் அதன் தாற்பரியம் அறிந்து செயற்பட வேண்டும்: வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் | Northern Province Governor S Secretariat Report

இந்நிலையில் இன்றைய தினம் (23/04/2024) பிரசுரமாகிய குறித்த பத்திரிகையின் முதற்பக்கத்திலும், ஊடகங்களின் சுதந்திரத்தை ஆளுநர் கேள்விக்குள்ளாக்குவதை போன்று தலைப்பிடப்பட்டு செய்தி பிரசுரமாகியுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கணக்காளரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, அந்த பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு தனது நியாயப்பாடுகளை சமர்பிக்க பொலிஸாரால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, கடந்த 22 ஆம் திகதி வாக்குமூலம் வழங்க அவர் சென்றிருந்தார்.

பலவந்தமாக போர் வலயத்திற்கு அனுப்பப்படும் இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை

பலவந்தமாக போர் வலயத்திற்கு அனுப்பப்படும் இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை

பொலிஸ் விசாரணை

விடயம் தொடர்பான முறைப்பாடு ஆளுநர் செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதில் ஆளுநரின் எவ்வித தலையீடுகளும் இல்லை என்பதை இந்த ஊடக அறிக்கையினூடாக கூறிக்கொள்கின்றோம்.

குறித்த பத்திரிகையின் பிரதம ஆசிரியராக செயற்படுபவர் ஓர் அரச உத்தியோகஸ்தர். ஆசிரியர் நியமனம் பெற்றுள்ள இவர், சுமார் 15 வருடங்கள் கடமை நிறைவேற்று அதிபராக செயற்பட்டு வந்துள்ளார்.

ஊடகங்கள் அதன் தாற்பரியம் அறிந்து செயற்பட வேண்டும்: வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் | Northern Province Governor S Secretariat Report

இந்த காலப்பகுதியில் பல தடவைகள் அதிபர் தரத்திற்கான போட்டி பரீட்சைகள் நடத்தப்பட்ட போதிலும், இவர் உள்ளிட்ட சில கடமை நிறைவேற்று அதிபர்கள் பரீட்சையில் சித்தியடைய தவறியுள்ளனர்.

இந்நிலையில், அண்மையில் அதிபர் சேவைக்கான போட்டி பரீட்சை நடத்தப்பட்டு வழங்கப்பட்ட அதிபர் நியமனத்தின் போதும், சில கடமை நிறைவேற்று அதிபர்கள் உள்வாங்கப்படவில்லை.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் சர்வதேச சக்திகள்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் சர்வதேச சக்திகள்

மத்திய அமைச்சின் தீர்மானம்

இந்த விடயம் தொடர்பில் கடமை நிறைவேற்று அதிபர் சங்கத்தால் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆளுநரிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது.

மத்திய கல்வி அமைச்சிடமும் தமது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் தீர்மானம் கிடைக்கும் வரை, கடமை நிறைவேற்று அதிபர்களாக செயற்பட அனுமதிக்குமாறு ஆளுநரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு அமைய, மத்திய அமைச்சின் தீர்மானம் வரும் வரை அவர்கள் கடமை நிறைவேற்று அதிபர்களாக செயற்பட ஆளுநர் அவர்களினால் அனுமதி வழங்கப்பட்டது.

ஊடகங்கள் அதன் தாற்பரியம் அறிந்து செயற்பட வேண்டும்: வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் | Northern Province Governor S Secretariat Report

எனினும், இவர்களின் கோரிக்கையை அமைச்சரவை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விடயங்கள் ஆளுநரின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது என்பது தொடர்பில் கடமை நிறைவேற்று அதிபர் சங்கத்திற்கு தெளிவுப்படுத்தப்பட்ட பின்புலத்தில், வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்களின் செயலாளர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும், ஆளுநர் அவர்களின் நடவடிக்கை தொடர்பிலும், கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி குறித்த பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் “ஆளுநருக்கான அவசர மடல்” என்ற தலைப்பின் கீழ் விமர்சிக்கப்பட்டிருந்தது.

அமைச்சின் செயலாளர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக கூறியுள்ள போதிலும், அதன் உண்மைத்தன்மையை அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

நாட்டில் இனங்காணப்பட்டுள்ள மலேரியா நோயாளர்கள்

நாட்டில் இனங்காணப்பட்டுள்ள மலேரியா நோயாளர்கள்

இன நல்லிணக்கத்திற்கு பாதகம்

ஆதாரங்களுடன் எமக்கு அறிவித்திருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அதனை விடுத்து மக்களை குழப்பும் வகையில் செய்திகளை பிரசுரிப்பது எந்த வகையில் ஊடக தர்மத்திற்கு பொருத்தமானது? இதேவேளை “சிங்களவர் ஒருவர் வடக்கின் ஆளுநராக இருந்தால்”... என்றும் அவர் தனது ஆசிரியர் தலைப்பில் எழுதியிருந்தார்.

இதனூடாக இன நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படும் வகையில் அவர் எழுதுகிறாரோ என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டி உள்ளது. மேலும்  ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாக நியமிக்கப்படும் ஆளுநர்கள் தொடர்பிலும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வடக்கு மாகாணத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஆளுநர்களின் செயற்பாடுகளை உதாரணம் காட்டி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆளுநர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார எல்லைக்கு உட்பட்டு அவர் தனது பணியை சிறப்புற முன்னெடுத்துவரும் நிலையில், இவ்வாறான அவதூறான செய்திகளை பிரசுரிப்பது பொருத்தமற்ற செயல் என நாம் கருதுகின்றோம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி வழக்கு விவகாரம்: மின்னியல் பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு பிடியாணை

இலங்கைத் தமிழரசுக் கட்சி வழக்கு விவகாரம்: மின்னியல் பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு பிடியாணை

ஒழுக்காற்று விசாரணை

குறித்த பத்திரிகையின் பிரதம ஆசிரியர், அரச நியமனம் பெற்ற ஆசிரியராக பணியாற்றிக்கொண்டு இவ்வாறு தனது தனிப்பட்ட விடயங்களுக்காக, ஊடகத்தை பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டில் தற்போது காணப்படும் சட்டங்களுக்கு அமைய, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

மேலும், அந்த பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அரச உத்தியோகஸ்தர் என்ற அடிப்படையில், அவர் தொடர்பான திணைக்கள மட்ட ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்வதற்கான முன்னோடியாகவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனை தவிர ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

நிர்வாக சமநிலையை சீர்குலைக்கும் வகையிலும், இன, மதங்களுக்கு இடையில் பங்கம் ஏற்படும் வகையில் அவர் செயற்பட்டுள்ளதாக நாம் கருதுகிறோம். பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஊடகங்கள் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும்.

அரச சேவையை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் சிக்கலை எதிர்நோக்கும் பட்சத்தில் ஊடகங்கள் அவற்றை எமக்கு அறிவிக்க முடியும். அதைவிடுத்து விமர்சனம் என்ற போர்வையில் ஊடக தர்மத்திற்கு எதிராக ஊடகங்கள் செயற்படக்கூடாது என்பதே எமது அவா. ஊடக சுதந்திரத்தில் ஒருபோதும் நாம் தலையிடுவதில்லை என்பதுடன் ஊடகங்களுடன் இணைந்து மக்கள் பணியாற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் கூறிக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் விசேட கலந்துரையாடல்

இலங்கை தமிழரசு கட்சியின் விசேட கலந்துரையாடல்

ஈரானுடனான உறவு நீளும்: ரணில் தெரிவிப்பு

ஈரானுடனான உறவு நீளும்: ரணில் தெரிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW



10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US