தடை செய்யப்பட்ட வலைகள் பயன்பாடு! வட மாகாண கடற்றொழில் சங்கங்கள் குற்றச்சாட்டு
உள்ளூர் கடற்தொழிலாளர்கள் சிலர் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து வருவதாக வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்றைய தினம் (15.09.20263) இடம்பெற்றிருந்தது.
தடை செய்யுமாறு கோரிக்கை
சட்டவிரோத கடற்றொழில்களை தடை செய்யுமாறு கோரி வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கங்களை சேர்ந்தவர்கள் இன்றைய தினம் ஊடக சந்திப்பு ஊடாக தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக குறித்த பகுதிகளில் உள்ள உள்ளூர் கடற்தொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து வருகின்றனர்.
பாதிப்பு
இதனால் ஏனைய சிறு தொழில் கடற்தொழிலாளர்கள் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகுகின்றனர். சட்டவிரோத தொழிலை நிறுத்துவதற்கு கடற்படை முயற்சிகளை எடுத்து வரும் நிலையிலும் சில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இதற்கு உடந்தையாக காணப்படுகின்றனர்.
எனவே தடை செய்யப்பட்ட வலைகள் பயன்பாட்ட கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உரிய தரப்புகள் முன் வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.