மன்னாரில் ஆரம்பமானது வடமாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக்!
வடமாகாண பூப்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்த வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி நேற்று (12) காலை 8.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் ஆரம்பமானது.
இறுதிச் சுற்று
குறித்த போட்டியில் வடக்கு மாகாணத்தில் இருந்து 06 அணிகளும், அதன் உரிமையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, அணிகளின் அறிமுகம் இடம்பெற்ற நிலையில் முதல் சுற்று ஆரம்பமானது. தொடர்ந்து இன்றைய தினம் (13) மாலை 4.30 மணிக்கு இறுதிச் சுற்று மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற உள்ளன.
ஆரம்ப நிகழ்வான நேற்று (12) விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், உதவி மாவட்டச் செயலாளர் வி.டில்சான் பயஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 1 மணி நேரம் முன்
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri