வட மாகாணத்திற்கு வெளியே பணியாற்றும் சுகாதார சேவையாளர்களுக்கான அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் பணியாற்றும் வட மாகாணத்தை சேர்ந்த சுகாதார சேவையாளர்களுக்கு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் திலிப் லியனகே அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று முன்தினம் (06.10.2022) அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தைச் சேர்ந்த பல சுகாதார சேவையாளர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் முதல் நியமனங்களை பெற்று பணியாற்றி வருகிறார்கள்.
வட மாகாண சுகாதார சேவையாளர்கள்
சுகாதார சேவையாளர்கள் வட மாகாணத்திற்கு இடமாற்றம் பெற்று பணியாற்ற விரும்புகிறார்கள் என அவர்களது பெற்றோர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
எனவே அவ்வாறு பணியாற்றுகின்றவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு நாம் தெரிவித்துள்ளோம்.
பிற மாகாணங்களில் தற்போது நியமனம் பெற்று கடமையாற்றும் வட மாகாணத்தை சொந்த இடமாகக் கொண்டுள்ள சுகாதார சேவையாளர்களில் வடக்கு மாகாணத்தில் சேவையாற்ற விரும்பும் எவராவது இருந்தால் அவர்கள் தமது முழுப்பெயர் தற்போது கடமையாற்றும் சேவை நிலையம் அது அமைந்துள்ள மாவட்டம் மற்றும் தொடர்பு இலக்கம் ஆகிய விபரங்களை எமக்கு தெரிவிக்குமாறு அறிவித்துள்ளோம்.
தகவல் வழங்கும் விபரம்
இந்த விபரங்களை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிமனை, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் அல்லது 777842861 என்ற வாட்ஸ்சப் செயலி ஊடாகவும் அனுப்பி வைக்குமாறும் அறிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.




