மக்களுக்கு சேவை செய்வதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! வேதநாயகன்
நான் பெரிது, நீ பெரிது என்று பாராமல் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களும், செயலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள், ஆணையாளர்களுக்கான 'தூய்மை இலங்கை' செயற்றிட்டத்தின் கீழான விழிப்புணர்வு செயலமர்வு கைதடியிலுள்ள வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று (20) உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
மக்களுக்கு சேவை
இந்த நிகழ்வைத் தொடக்கி வைத்து உரையாற்றிய ஆளுநர்,
மக்களுக்கு சேவை செய்வதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரிவரப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நாங்கள் சாதாரணமானவர்கள், எங்களை எப்போதும் மக்கள் சந்தித்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற வகையில் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்.
மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதற்கே அனைவரும் முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட வேண்டும். தூய்மை இலங்கை செயற்றிட்டம் பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது.
எங்களது சேவைகளின் தரமும் உயரவேண்டும். மக்களுக்கு சிநேகபூர்வமான, விரைவான, தரமான சேவைகளை நீங்கள் வழங்கவேண்டும். மக்கள் அதைத்தான் எதிர்பார்க்கின்றார்கள்.
நீதி நியாயம்
கடந்த காலங்களில் மக்கள் சோலை வரி பெயர் மாற்றம், கட்டட அனுமதி ஆகியனவற்றுக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்தது. அதை மாற்றியமைக்கவேண்டும்.
எங்களுக்கான தேவைகளை எப்படி விரைவாக நிறைவேற்றிக்கொள்கின்றோமோ அதைப்போல மக்களின் தேவைகளையும் உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.
மக்கள் அதைத்தான் எதிர்பார்க்கின்றார்கள். அத்தகைய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதுவும் தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. மக்கள் எங்களிடம் வந்தால் அவர்களுக்கு நீதி நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக்க வேண்டும்.
அப்போதுதான் மக்களுக்கு சிறப்பான சேவை கிடைக்கும்.
இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சுகந்தி மற்றும் ஜனாதிபதிக்கான மூத்த உதவிச் செயலர் சாரதாஞ்சலி மனோகரன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.












Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
