எரிபொருளை பெற்ற அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு செல்ல வேண்டும்:வடக்கு ஆளுநர் தெரிவிப்பு
வடக்கில் தமது கடமைகள் நிமிர்த்தம் எரிபொருளைப் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்தார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண சாரதி காப்பாளர்கள் தாம் கடமைக்கு செல்வதற்குரிய எரிபொருளை புதிய தரப்பினர் தமக்கு பெற்றுத் தரவில்லை என நடத்திய ஊடக சந்திப்பை அடுத்து ஆளுநர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கரிசனையாக உள்ளதோடு அவர்களுக்கான எரிபொருளை தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தமது கடமைகளை காரணங்காட்டி எரிபொருளை பெற்றவர்கள் தமது கடமைகளை உரிய
முறையில் மேற்கொள்ள வேண்டுமெனவும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri