மானிப்பாய் பிரதேச மருத்துவமனை அபிவிருத்தி தொடர்பில் ஆளுநரின் முக்கிய தீர்மானம்

Jaffna Hospitals in Sri Lanka Nothern Province Nagalingam Vedanayagam Nurse
By Thevanthan Jun 19, 2026 01:52 PM GMT
Report

மானிப்பாய் பிரதேச மருத்துவமனை மற்றும் மல்லாவி ஆதார மருத்துவமனை ஆகியவற்றின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மற்றும் அங்கு நிலவும் ஆளணிப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் வட மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டமானது ஆளுநர் செயலகத்தில் நேற்று(18.06.2026) இடம்பெற்றுள்ளது.

மோசமான நிலை ஏற்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்

மோசமான நிலை ஏற்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்

மானிப்பாய் பிரதேச மருத்துவமனை அபிவிருத்தித் திட்டம்

இதன்போது,  மருத்துவமனைகளின் நோயாளர் நலன்புரிச் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றைத் தீர்ப்பதற்கான சாதகமான தீர்மானங்களும் எட்டப்பட்டுள்ளன.

மானிப்பாய் பிரதேச மருத்துவமனை அபிவிருத்தி தொடர்பில் ஆளுநரின் முக்கிய தீர்மானம் | Northern Governor Moves To Upgrade Local Hospitals

மானிப்பாய் பிரதேச மருத்துவமனையானது அதிகளவான நோயாளர்களுக்குச் சேவையாற்றி வரும் போதிலும், பல நீண்டகாலக் குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக நோயாளர் நலன்புரிச் சங்கத்தால் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, தாதியர்கள், மருத்துவ ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்கள், சிற்றூழியர்கள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை, முழுமையான வசதிகளுடன் கூடிய வெளிநோயாளர் பிரிவு மற்றும் விடுதி வசதியின்மை ஆகியன இந்தச் சங்கத்தின் கோரிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அடிப்படை வசதிகள்

இது தொடர்பில் கூட்டத்தில் விளக்கமளித்த ஆளுநர்,

வடக்கு மாகாணத்திலுள்ள 33 பிரதேச மருத்துவமனைகளுக்குத் தாதியர்களுக்கான ஆளணி அனுமதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

இது குறித்து ஆளணி முகாமைத்துவச் சேவைகள் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அதனைச் சாதகமாகப் பரிசீலிப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

மானிப்பாய் பிரதேச மருத்துவமனை அபிவிருத்தி தொடர்பில் ஆளுநரின் முக்கிய தீர்மானம் | Northern Governor Moves To Upgrade Local Hospitals

மானிப்பாய் மருத்துவமனையின் நோயாளர் உள்வருகையின் அடிப்படையில் தற்போது 6 தாதியர்களுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த மருத்துவமனை 'சி' தரத்திற்குரியதாக காணப்பட்ட போதிலும், அதற்கான முழுமையான வசதிகளுடன் இயங்கவில்லை.

எனவே, முதலில் அந்தத் தரத்திற்குரிய அனைத்து வசதிகளையும் வழங்கி மருத்துவமனையைச் சீராக இயங்கச் செய்த பின்னரே தரமுயர்த்துவது குறித்துச் சிந்திக்க முடியும்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் இன்னொரு மருத்துவமனையிலிருந்து ஆளணியை எடுத்து இங்கு வழங்குவது அந்த மருத்துவமனையின் சேவையைப் பாதிக்கும் என்பதால், இதற்குத் தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசுடன் இணையும் தமிழ்க்கட்சிகள் - மாற்றத்திற்காக சிவசக்தி ஆனந்தன் வழங்கும் ஆலோசனை

இந்திய அரசுடன் இணையும் தமிழ்க்கட்சிகள் - மாற்றத்திற்காக சிவசக்தி ஆனந்தன் வழங்கும் ஆலோசனை

மருத்துவமனையின் கட்டிடத் தேவை

அத்துடன், மருத்துவமனையின் கட்டிடத் தேவைகளுக்காக நிரல் அமைச்சிடம் விசேட நிதி ஒதுக்கீட்டைக் கோருமாறு, கூட்டத்தில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜாவிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், மருத்துவ ஆய்வுகூடத்துக்கான படிக்கட்டுக் கூரை, ஸ்கேனர், சி.சி.டி.வி. மற்றும் சூரிய சக்திக் கட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தேவைகளும் இதன்போது பரிசீலிக்கப்பட்டுள்ளன.

மானிப்பாய் பிரதேச மருத்துவமனை அபிவிருத்தி தொடர்பில் ஆளுநரின் முக்கிய தீர்மானம் | Northern Governor Moves To Upgrade Local Hospitals

மல்லாவி ஆதார மருத்துவமனையின் அவசர மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து அதன் நோயாளர் நலன்புரிச் சங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளன.

குறிப்பாக, குருதி சுத்திகரிக்கும் பிரிவு விரிவாக்கப்படவுள்ளமையால் ஆய்வுகூடத்தைப் பிறிதோர் இடத்துக்கு நகர்த்துவதற்குத் தேவையான 8 மில்லியன் ரூபா நிதி மற்றும் ஆண், பெண் நோயாளர் விடுதிகளுக்கான நடைபாதை மேற்கூரை அமைப்பதற்கான 2.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீடுகள் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படலாம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒப்பந்த அடிப்படையிலான திருத்தங்கள்

மருத்துவமனைக்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்கள் ஒருவரை நியமித்தல்.

வெளிநோயாளர் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் கூரை ஒழுக்குக் குறித்து மாகாணக் கட்டடங்கள் திணைக்களப் பொறியியலாளரின் மேற்பார்வை அறிக்கையைப் பெற்றுத் திருத்தங்களை மேற்கொள்ளல்.

மானிப்பாய் பிரதேச மருத்துவமனை அபிவிருத்தி தொடர்பில் ஆளுநரின் முக்கிய தீர்மானம் | Northern Governor Moves To Upgrade Local Hospitals

புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள இரண்டு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு மத்திய அரசிடமிருந்து வரி விலக்கைப் பெற்றுக்கொள்ளல் ஆகிய விடயங்கள் பற்றியும் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினரும் சண்டிலிப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஸ்ரீ பவானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், மாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர், மேலதிகப் பணிப்பாளர் மற்றும் மருத்துவமனைகளின் பொறுப்பு மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

சுரேஷ் சலேயை பரிசோதித்த 5 விசேட மருத்துவர்கள்! விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு..

சுரேஷ் சலேயை பரிசோதித்த 5 விசேட மருத்துவர்கள்! விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு..


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US