தொழில்நுட்ப ஆளணி போதாது! வெற்றிடங்களை நிரப்ப வடக்கு ஆளுநர் விசேட பணிப்புரை

Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples Sri Lanka Government Money
By Rakesh Feb 24, 2026 08:22 AM GMT
Report

வடக்கு மாகாணத்துக்கு நடப்பு ஆண்டில் பல்வேறு மூலங்களிலிருந்தும் பெருமளவிலான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறவுள்ள நிலையில், அவற்றினூடான மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுப்பதற்குத் தேவையான மனிதவளத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் நேற்று(23.02.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. 

லண்டனில் ஈழத்தமிழர்களின் எதிர்ப்புக்கு பின்னர் மனம் மாறிய நாமல்!

லண்டனில் ஈழத்தமிழர்களின் எதிர்ப்புக்கு பின்னர் மனம் மாறிய நாமல்!

வெளிநாட்டு நிதியுதவிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனை

இதன்போது, மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதி, டிட்வா பேரிடர் மீள்கட்டுமான நிதி, மாவட்டச் செயலகங்கள் மற்றும் மத்திய அமைச்சுக்களின் ஊடான நிதி ஒதுக்கீடுகள், வெளிநாட்டு நிதியுதவிகள் எனப் பல்வேறு மூலங்களிலிருந்தும் வடக்கின் அபிவிருத்திப் பணிகளுக்காக நிதி கிடைக்கப்பெறவுள்ளமை தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

தொழில்நுட்ப ஆளணி போதாது! வெற்றிடங்களை நிரப்ப வடக்கு ஆளுநர் விசேட பணிப்புரை | Northern Governor Issues To Fill Vacancies

வழமையான ஒதுக்கீடுகளைத் தாண்டி கிடைக்கப்பெறவுள்ள இந்த மிகப் பெரிய நிதியைக் கொண்டு திட்டங்களை முன்னெடுக்கும்போது, மாகாணத் திணைக்களங்களில் ஏற்கனவே நிலவும் ஆளணிப் பற்றாக்குறையானது பெரும் சவாலாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த நிலைமையைச் சீர்செய்து, குறிப்பாகப் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்களின் வெற்றிடங்களை நிரப்பி, செயற்றிட்டங்களை எவ்வாறு தடையின்றி முன்னெடுப்பது என்பது குறித்து உடனடியாக ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.   

தொழில்நுட்ப ஆளணி தேவை

இதனைத் தொடர்ந்து, மனிதவள மற்றும் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வது தொடர்பான பல்வேறு ஆக்கபூர்வமான யோசனைகளை வடக்கு மாகாணப் பிரதிப் பிரதம செயலாளர் ந.சுதாகரன் முன்வைத்துள்ளார்.

தொழில்நுட்ப ஆளணி போதாது! வெற்றிடங்களை நிரப்ப வடக்கு ஆளுநர் விசேட பணிப்புரை | Northern Governor Issues To Fill Vacancies

அத்துடன், அவர் வெற்றிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல், மாகாணத் திணைக்களங்களுக்கிடையில் தேவைக்கமைவாக உத்தியோகத்தர்களைப் பரிமாறுதல் மற்றும் பயிலுனர்களை உள்ளீர்த்தல் போன்ற மாற்று வழிகளையும் பரிந்துரைத்துள்ளார்.

தற்போதுள்ள அனுமதிக்கப்பட்ட ஆளணியை முழுமையாக நிரப்பினாலும்கூட, எதிர்வரும் மிகப்பெரிய செயற்றிட்டங்களுக்கு அது போதுமானதாக அமையாது எனவும், தரமான வேலைத்திட்டங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்வதற்கு மேலதிக தொழில்நுட்ப ஆளணியை உள்ளீர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் ந.சுதாகரன் தெளிவுபடுத்தியுள்ளார். 

ஆளுநரின் பணிப்புரை

இதனைத் தொடர்ந்து, பிரதிப் பிரதம செயலாளரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை விரிவாக ஆராய்ந்த ஆளுநர், அவற்றுக்கு அமைவாகத் துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

தொழில்நுட்ப ஆளணி போதாது! வெற்றிடங்களை நிரப்ப வடக்கு ஆளுநர் விசேட பணிப்புரை | Northern Governor Issues To Fill Vacancies   

இதேவேளை, புதிதாக இணைக்கப்படுபவர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டதுடன், ஆளணி நிரப்பல் செயற்பாடுகளை உடனடியாகப் பூர்த்தி செய்து அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக ஆரம்பிக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விசேட கலந்துரையாடலில், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணத் திணைக்களப் பணிப்பாளர்கள் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

தொழில்நுட்ப ஆளணி போதாது! வெற்றிடங்களை நிரப்ப வடக்கு ஆளுநர் விசேட பணிப்புரை | Northern Governor Issues To Fill Vacancies

குற்றத்தை பகிரங்கமாக ஏற்றுக்கொண்ட அநுர தரப்பு அமைச்சர்! மோசடிகளுக்கு மறுப்பு..

குற்றத்தை பகிரங்கமாக ஏற்றுக்கொண்ட அநுர தரப்பு அமைச்சர்! மோசடிகளுக்கு மறுப்பு..

மோசடியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து

மோசடியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து



8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US