கோட்டாபயவை போல் வடக்கு ஆளுநரும் செல்ல நேரிடும்: சரவணபவன் எச்சரிக்கை
தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எமது மக்களின் காணிகளை படைகளுக்குச் சுவீகரித்துக் கொடுக்கும் வடக்கு மாகாண ஆளுநரின் மிகக் கேவலமான செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு ஆளுநரின் முயற்சியை முளையிலே கிள்ளியெறிய வேண்டும்.
காணி வளங்கும் செயற்பாடுக்கு எதிர்ப்பு
மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் அதிகாரிகளை வரவழைத்து அவர்களை நிர்ப்பந்தித்து முப்படையினருக்கும் காணிகளை தாரைவார்க்கும் செயற்பாட்டை ஏற்க முடியாது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (15.11.2022) நடைபெறவுள்ள கூட்டத்தை ஆளுநர் நிறுத்தாவிட்டால், மக்களின் போராட்டத்தை அவர் சந்திக்க நேரிடும்.
எச்சரிக்கை விடுக்கும் ஈஸ்வரபாதம் சரவணபவன்
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எப்படி தப்பியோடினாரோ அதேபோன்று
செல்ல நேரிடும் என்பதையும் எச்சரிக்கையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
