மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பலவீனப்படுத்த முயற்சி! வடக்கு ஆளுநர் குற்றச்சாட்டு
13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பலவீனப்படுத்துவதற்கு சில தனிநபர்கள் முயற்சிப்பதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடக அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தவறான பாதையில் சித்தரிக்கப்படும் மாகாண அதிகாரங்கள்
அதில் மேலும், மாகாணசபை முறைமையை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என பல மாகாணங்கள் போராடும் நிலையில் உரத்த குரலில் பேசும் சிலரின் செயற்பாடுகள் மாகாண அதிகாரங்களை தவறான பாதையில் சித்தரிப்பதாக அமைகிறது.

வட மாகாண அபிவிருத்திக்காக பெருநகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து 25இற்கு மேற்பட்ட நிறுவனங்கள் மாகாணத்தில் பணியாற்றியுள்ளன.
மேலும் மாகாண அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெளிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நோர்வே நாட்டின் மாகாண ஓய்வூதிய திட்டம் வழங்கும் நடைமுறை தொடர்பில் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| அதிகாரிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இடமாற்றம் வழங்கப்படாது: வட மாகாண ஆளுநர் |
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri