அதிகாரிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இடமாற்றம் வழங்கப்படாது: வட மாகாண ஆளுநர்
வடக்கு அரசாங்க அதிகாரிகள் மீது ஒழுக்காற்று விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்பட்டால், தண்டனை அல்லது பதவி நீக்கம் இடம்பெறுமே அல்லாமல் இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், வட மாகாணத்தில் கடமையாற்றும் அரச அதிகாரிகள் மீது யாராவது ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் முன்வைத்தால் ஆளுநர் என்ற ரீதியில் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்படும்.
அரச அதிகாரிகள்
விசாரணை ஒன்றில் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது. தண்டனை அல்லது சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படும்.
அரச உத்தியோகத்தர்கள் சேவையின் நிமித்தம் இடமாற்றத்திற்கு உரித்துடையவர்கள். அவர்களின் இடமாற்றம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் விசேட சேவை நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும்.
ஒழுக்காற்று விசாரணை
மாகாண இடமாற்றங்கள், நியமனங்கள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படுமே அல்லாமல் ஒழுக்காற்று விசாரணையால் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படாது.
ஆளுநரால் மேற்கொள்ளப்படும் அதிவிசேட சிறப்பு தர அதிகாரிகளின் நியமனத்தை
ஆளுநரால் மீண்டும் பெற முடியும் என தெரிவித்துள்ளார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
