உயிர்காக்கும் மருந்துகளைப்பெற வடக்கு ஆளுநர் பெரும் இடையூறு: அரச மருத்துவமனைக்குள்ளும் மூக்கை நுழைக்கிறார்

Colombo Northern Provincial Council Jaffna Teaching Hospital
By Rakesh May 24, 2022 05:23 AM GMT
Report

யாழ்.போதனா மருத்துவமனைக்குத் தேவையான அத்தியாவசியமான, அவசர தேவையாகவுள்ள உயிர் காக்கும் மருந்துகளைப் புலம்பெயர் நன்கொடையாளர்களிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளார் என்று நம்பகமாகத் தெரியவருகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டை அடுத்து கொழும்பு சுகாதார அமைச்சு சில அறிவுறுத்தல்களை, மாகாண மற்றும் தேசிய மருத்துவமனைகளுக்கு விடுத்தது.

நன்கொடையாளர்களிடமிருந்து நேரடியாக மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அது தொடர்பான விவரங்களை தமக்கு அனுப்பி வைத்தால் போதுமானது எனவும் அறிவுறுத்தியிருந்தது. இதற்கு அமைவாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை என்பன மருந்துகளை நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டன.

உயிர்காக்கும் மருந்துகளைப்பெற வடக்கு ஆளுநர் பெரும் இடையூறு: அரச மருத்துவமனைக்குள்ளும் மூக்கை நுழைக்கிறார் | Northern Governor Barred Receiving Life Drugs

யாழ்.போதனா மருத்துவமனையால், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒரு தொகுதி மருந்துகளுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைவாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் அதனை வழங்க இணங்கியிருந்தது.

இந்தநிலையில் மூன்று தினங்களுக்கு முன்னர் யாழ்.போதனா மருத்துவமனை வட்டாரங்களை தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்ட வடக்கு ஆளுநர், தனக்குத் தெரியாமல் அதனை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்று கேட்டுள்ளார்.

அத்துடன் அந்த மருந்துப் பொருள்கள் கிடைக்கப்பெறுவதற்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளார். இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.

அதேதினத்தில், தனக்குத் தெரியாமல் எந்தவொரு நன்கொடையாளரிடமிருந்தும் மருந்துப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கும் ஆளுநர் வாய்மொழி மூலமான பணிப்புரையையும் விடுத்துள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றதாகத் தெரிவித்து இதுவரை 3 தடவைகள் மருந்துப் பொருள்களைக் கையளித்துள்ளார்.

உயிர்காக்கும் மருந்துகளைப்பெற வடக்கு ஆளுநர் பெரும் இடையூறு: அரச மருத்துவமனைக்குள்ளும் மூக்கை நுழைக்கிறார் | Northern Governor Barred Receiving Life Drugs

ஆனால், அந்த நன்கொடையாளர்கள் யார்? அவர்கள் வழங்கிய உதவித் தொகை எவ்வளவு? என்ற விவரங்களை அவர் வழங்கவில்லை. அதேவேளை மூன்று தடவைகளும் கொழும்பைச் சேர்ந்த ஒரே நிறுவனத்தின் ஊடாகவே மருந்துப் பொருள்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

அந்த நிறுவனம் கோவிட் இடர்காலப் பகுதியில், அன்டிஜென் சோதனைக் கருவிகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்து அரசாங்கத்துக்கு கூடிய விலையில் விற்பனை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு சர்ச்சையில் சிக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் கைத்தொலைபேசிக்கு அழைப்பை எடுத்து அவரது பதிலைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தபோதும் அவர் அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை.

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US