பால் - இறைச்சி தொடர்பான பெறுமதிசேர் முடிவுப் பொருள் உற்பத்தி: ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் வடக்கு ஆளுநர்

Northern Province of Sri Lanka Nagalingam Vedanayagam
By Thevanthan Oct 15, 2026 01:34 PM GMT
Report

வட மாகாணத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளில் ஒன்றாக விளங்கும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையை மேலும் மேம்படுத்துவதுடன், பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களைப் பெறுமதிசேர் முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை வடக்கு மாகாணத்திலேயே உருவாக்குவதற்கும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் சவால்கள், அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.பண்டார, ஆளுநரின் அழைப்பின் பேரில் இன்று (15.10.2026) வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு வருகை தந்தார்.

இதன்போது நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சந்திப்பு ஏற்பாடு

வடக்கு மாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அண்மையில் தம்மைச் சந்தித்தபோது முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பிலும், வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்துக்குப் பெரும் பங்களிப்பை வழங்கக்கூடிய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையை மேம்படுத்துவது தொடர்பிலும் ஆராய்வதற்காக இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

பால் - இறைச்சி தொடர்பான பெறுமதிசேர் முடிவுப் பொருள் உற்பத்தி: ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் வடக்கு ஆளுநர் | Northern Governer N Vethanayahan Statement

மத்திய அரசாங்கம், மாகாண நிர்வாகம் என வேறுபாடின்றி, வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் கால்நடை உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதன்போது வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், மாகாணத்தில் கால்நடைத் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைப்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தார். மாகாணத்தில் கால்நடை வைத்திய அலுவலகங்கள் உட்பட 47 நிறுவனங்களும் அலுவலகங்களும் இயங்குகின்றன.

எனினும், ஆளணி வெற்றிடங்கள், பழைய வாகனங்கள், போதிய போக்குவரத்து வசதியின்மை மற்றும் நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாகச் சேவைகளை முழுமையாக முன்னெடுப்பதில் சவால்கள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக, கால்நடை வைத்திய அலுவலகங்களில் அனுமதிக்கப்பட்ட 83 கால்நடை வைத்தியர் பணியிடங்களில் 49 பேர் மட்டுமே பணியாற்றுவதுடன், 34 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன.

பால் - இறைச்சி தொடர்பான பெறுமதிசேர் முடிவுப் பொருள் உற்பத்தி: ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் வடக்கு ஆளுநர் | Northern Governer N Vethanayahan Statement

மேலும், 15 கால்நடை அலுவலர் பணியிடங்களிலும் நியமனங்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. கால்நடை வைத்திய அலுவலகங்களுக்கான 28 வாகனங்களில் 13 வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையானவை என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.

தொழில்நுட்பப் பிரச்சினை

கால்நடை நோய்களைக் கண்டறிதல், நோய்த் தொற்று தொடர்பான மாதிரிகளைச் சேகரித்தல், வெறிநாய்க்கடி நோயுடன் தொடர்புடைய விலங்குகளைக் கையாளுதல், கால்நடைகளுக்கான மருந்து விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல், செயற்கைக் கருவூட்டலுக்கான பொருட்களைத் தொடர்ந்து வழங்குதல் உள்ளிட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகளும் முன்வைக்கப்பட்டன.

பால் - இறைச்சி தொடர்பான பெறுமதிசேர் முடிவுப் பொருள் உற்பத்தி: ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் வடக்கு ஆளுநர் | Northern Governer N Vethanayahan Statement

கால்நடை வைத்தியர்கள் மற்றும் கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்புதல், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், மேலதிக பணிநேரத்துக்கான கொடுப்பனவுகளை வழங்குதல், மருந்தக உதவியாளர்களுக்கான பணியிடங்களை உருவாக்குதல் மற்றும் தமிழ்மொழி மூலமான பயிற்சி வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட நிர்வாகத் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளரும் ஆளுநரின் ஆலோசனைக் குழுவின் இணைப்பாளருமான கலாநிதி அகிலன் கதிர்காமர், தேசிய உற்பத்தியில் வடக்கு மாகாணத்தின் பங்களிப்பை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை அடைவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள ஏழு முக்கிய துறைகளில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையும் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.

பால் - இறைச்சி தொடர்பான பெறுமதிசேர் முடிவுப் பொருள் உற்பத்தி: ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் வடக்கு ஆளுநர் | Northern Governer N Vethanayahan Statement

இந்த இலக்கை அடைவதற்கு கால்நடைத் துறையின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், பண்ணையாளர்களுக்கான ஆதரவை வலுப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய திணைக்களங்களுடன் இணைந்து திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுத்தல் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாகாணப் பணிப்பாளரால் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்குப் பதிலளித்த விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பண்டார, அவற்றைத் தீர்ப்பதற்கான சாத்தியமான வழிமுறைகள் தொடர்பில் விளக்கமளித்தார். கால்நடை வைத்தியர்கள் எப்போதும் பண்ணையாளர்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், கால்நடைகளுக்கான மருந்துகள் கால்நடை வைத்திய அலுவலகங்களின் ஊடாக ஒழுங்கான முறையில் விநியோகிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

பால் - இறைச்சி தொடர்பான பெறுமதிசேர் முடிவுப் பொருள் உற்பத்தி: ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் வடக்கு ஆளுநர் | Northern Governer N Vethanayahan Statement

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US