கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கு புதிய கட்டடம் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு
கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய கட்டடம் ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, இன்று (26.04.2024) திருகோணமலையில் (Trincomalle) இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் அவர்களின் பணிகளை சரியாக முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லையென கவலை தெரிவித்திருந்தனர்.
நிதி ஒதுக்கீடு
மேலும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடிய கட்டடத்தொகுதி பொருளாதார நெருக்கடியால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அக்கட்டடத்தை நிர்மாணித்து தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.
அக்கோரிக்கைக்கு அமைய, ஆளுநர் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் எவ்வித இன்னல்களும் இன்றி தங்களது கடமைகளை திறம்பட செய்ய அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடத்தொகுதி அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
















குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
