வெளிநாடொன்றில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் - பன்றிக் கூடுகளில் வேலை
வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக மக்களின் பணத்தை பெற்று ஏமாற்றும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.
இந்நிலையில், லிதுவேனியாவில் (Lithuania) கனரக வாகன சாரதி வேலைக்காக சென்று பன்றிக் கூடுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்ட இலங்கையர் இருவர் நாட்டு திரும்பி உள்ளனர்.
குறித்த இருவரும் விமானம் மூலமாக இன்று (26.4.2024) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பன்றி வளர்ப்பு வேலை கடினம்
குறித்த மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றில் 12 இலட்சம் ரூபாவை செலுத்தி 106 இலங்கையர்கள் லிதுவேனியாவிற்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.
இவர்கள் அந்த நாட்டிற்குச் சென்ற பிறகு இருவருக்கு மட்டும் கனரக வாகன சாரதிகள் வேலை வழங்கப்பட்டுள்ளது. ஏனையவர்கள் பன்றிக் கூடுகளில் வேலைக்கு அனுப்பப்பட்டதாகவும் நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையிலிருந்து சென்ற அனைவரும் கனரக வாகனங்களை செலுத்துவதற்கு தகுதியானவர்கள் என்பதுடன் பன்றி வளர்ப்பு வேலை அவர்களுக்குக் கடினமானதாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
