வடக்கு மக்கள் எதிர்நோக்கப்போகும் பேராபத்து! நினைவேந்தல் இடங்களை அபகரிக்கும் முனைப்பில் அரசு
ஈழத்தமிழர்களின் இருப்பில் தொடர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திவரும் இலங்கை அரசின் புதிய நகர்வாக வடக்கில் பாரியளவிலான நில அபகரிப்பை திட்டமிட்டிருக்கிறது.
கடந்த அரசுகளைப்போலவே சிங்கள பௌத்த முதன்மைவாத்த்தை முன்னிறுத்தி ஆக்கிரப்புகளை நிகழ்த்தும் அரச நிகழ்ச்சிநிரல் இம்முறை வடக்கில் தமிழர்களின் இருப்பில் மிகப்பெரும் இனச்சிதைப்பை நிகழ்த்தும் ஒரு திட்டமிட்ட நகர்வை கனகச்சிதமாக முன்னகர்த்த விளைவதை அவதானிக்க முடிகிறது.
சுமார் 5941 ஏக்கர் நிலம் எதற்காக சுவீகரிக்கப்படப்போகிறது என்ற கேள்விக்கு அரசின் சபை முதல்வரிடம் பதில் இல்லை என்ற போது இந்த விவகாரத்தில் மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.
வழமையாக நினைவேந்தல்களை தடுக்கும் அரச இயந்திரம் இப்போது ஒரு படி மேல் சென்று நினைவேந்தல் இடங்களையும் மாவீரர் துயிலும் இல்லங்களையும் அபகரிக்கப்போகிறதா என்ற கேள்வி எழுகின்றது.
அந்தவகையில் தமிழர்கள் எதிர்நோக்கப்போகும் ஒரு பேராபத்து தொடர்பில் எச்சரிக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு..

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri
