‘‘வடக்கு கிழக்கை விடுதலை புலிகளின் தலைவர் ஆண்டிருந்தால் இன்று அவரிடம் கடனை வாங்கி இருக்கலாம்’’ (Photos)

Shritharan North SL Tamilpeople Missingpeople Alisabry
By Independent Writer Mar 20, 2022 06:32 PM GMT
Report

"பிரபாகரன் வடக்கு கிழக்கை கேட்டார். அவரிடம் வடக்கு கிழக்கை கொடுத்திருந்தால் இன்று நாம் அவரிடம் இருந்து கடனை வாங்கி இருக்கலாம் என்று சிங்கள மக்கள் கூறுகிறார்கள் எனவும் எங்கள் தலைவனின் அருமையினை இப்போது சிங்கள மக்களும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபாயும் சான்றிதழும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனும் கருத்து தொடர்பில் நேற்றைய தினம் பச்சிலைப்பள்ளி பிரதேச கட்சியின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தன் சொந்த நாட்டில் வாழும் மக்களையே இனப்படுகொலை செய்துள்ள அரசு. தமிழர்கள் சேர்ந்து வாழ்வதா? பிரிந்து போவதா? வாக்கெடுப்புக்கு செல்ல இலங்கை தயாரா? என சிவஞானம் சிறீதரன், நீதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதி அமைச்சராக இருக்கிற அலி சப்ரி என்பவர் ஒப்புக்கு மாரடிப்பவராகவே இருக்கிறார். அரசாங்கம் சொல்லும் எல்லாவற்றிற்கும் தலையாட்டுபவராகவே அவர் இருக்கிறார்.

எங்கள் உறவுகளின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாய் அல்ல அவர்களின் உயிர் விலைமதிப்பற்றவை உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

நீதி நிலை நாட்டப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கூறுவது போல பதவியாசை, பணத்தாசை,பிடித்து அலைபவர்களிற்கு எமது பாசப்போராட்டம் புரியப்போவதில்லை என்பது உண்மையாகும்.

5 வருடங்களாக நீதி கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடிக் கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் இராணுவத்தின் கைகளில் ஒப்படைத்த பிள்ளைகளைத்தான் கேட்டு நிற்கிறோம்.

அவர்களை ஒப்படைத்த தாய் தந்தையர்கள், மனைவி, பிள்ளைகள் போன்றோர்கள் கண்கண்ட சாட்சியங்களாக உள்ளனர் . தனது நாட்டிற்குள் வாழும் சொந்த மக்களில் இத்தனை இலட்சம் மக்களைக் கொன்றும் காணாமல் ஆக்கிய அரசாங்கத்தோடும் நாங்கள் சேர்ந்து வாழ்வதா, இல்லை பிரிந்து வாழ்வதா என தமிழ் மக்களிடம் பகிரங்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ஒரு இலட்சம் தருவதாய் கூறும் நீதி அமைச்சருக்கு நாம் தரும் பதில் உங்கள் அரசு செய்த இனப்படுகொலைகளுக்கு உங்கள் அரசிற்கு திராணி இருந்தால் தமிழ் மக்களிடம் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துங்கள் என்பதேயாகும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார். 

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், உபதவிசாளர் தவபாலன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உபதவிசாளர் கயன், கிளிநொச்சி சேவைச் சந்தையின் தலைவர் இரத்தினமணி, கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி கிளையின் செயலாளர் விஜயன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். 


GalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US