இராமேஸ்வர போராட்டம் சர்வாதிகாரமானது: வடக்கு கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டு
சர்வாதிகாரமான போராட்டம், எல்லை தாண்டி இலங்கை வடக்கு கடற்றொழிலாளர்களின் வயிற்றில் அடித்து எமது கடல்வளத்தை அழித்து எமது பொருளாதாரத்தை சூரையாடிவிட்டு சர்வாதிகாரமான நியாயங்களற்ற போராட்டமே இராமேஸ்வர விசைப்படகு கடற்றொழிலாளர்களின் போராட்டம் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஐந்து கடற்றொழிலாளர்களுக்காக போராடுவது கச்சதீவுக்கு பக்தர்களை போகவிடாது தடுப்பது நியாயங்களற்ற விடயமாகும்.
2010ம் ஆண்டுகளின் பின் இந்திய இழுவைப் படகுகளினால் அழிக்கப்பட்ட பல கோடி பொறுமதியான எமது சொத்துக்களுக்கு நட்ட ஈட்டை கோருவோம் அதை செலுத்தாத வரை கைது செய்யும் கடற்றொழிலாளரை விடுதலை செய்யக்கூடாது என நாமும் நீதிமன்றில் வாதிடுவோம்” என்றார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |