பாதுகாப்பற்ற சூழலியே வடமாகாண ஊடகவியலாளர்கள் சேவையினை முன்னெடுக்கின்றார்கள்: சரவணபவன் ஆதங்கம்
வடமாகாணத்தில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பற்ற சூழலிலேயே தமது சேவையினை முன்னெடுக்கின்றார்கள் என உதயன் குழுமத்தை வரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான சுயாதீன ஊடகவியலாளர் தம்பிதுரை பிரதீபனின் வீட்டினை நேரடியாக சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு
சுயாதீன ஊடகவியலாளர் தம்பிதுரை பிரதீபனின் வீட்டிற்கு சென்றேன். அவருடைய வீடு மற்றும் சொத்துக்களுக்கு கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. நான் பல தடவைகள் கூறியிருக்கின்றேன்.
ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அற்ற சூழலில் தங்களுடைய சேவைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இவ்வாறு பல சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்பட்ட சம்பவங்களுக்கு நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டிருக்குமானால் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்றிருக்காது.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |