மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த தாய் கைது
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் தனது மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த குற்றச்சாட்டில் தாயார் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று முன்தினம்(12) புதுக்குடியிருப்பு தேவிபுரம் பாரதி வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன்போது 32 வயதுடைய இரண்டு பதின்ம வயது பெண்பிள்ளைகளை கொண்ட தாயாரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கணவனை பிரிந்த நிலையில் வாழ்ந்து வரும் இவர் தனது 13 வயதுடைய மகள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை அவரை தவறான முறையில் தனது கைபேசியில் காணொளி எடுத்துள்ளார்.
இதனை சிறுமியின் தங்கையான 10வயது சிறுமி கண்டு தனது சித்திக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த தாயார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
