வடக்கில் பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது : சுபோகரன் அறிவிப்பு
வடக்கில் பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது என வடக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் சுபோகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக வடக்கு உட்பட இலங்கையின் சில பகுதிகளில் வழியில் தர சுட்டெண் சற்று உயர்வாக காணப்படுகின்ற அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.
செறிவடையும் மாசுக்கள்
இது சாதாரணமாக வளி மண்டலத்தில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றத்தின் மூலம் அதாவது காற்றின் வேகம் காற்றின் திசை மற்றும் தாழமுக்க மாற்றத்தின் காரணமாக வளியில் காணப்படும் சில மாசுக்கள் இலங்கையிலே செறிவடையக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அந்த வகையிலேயே கடந்த சில நாட்களாக வளித்தர சுட்டெண் இலங்கையில் காணப்படுகின்ற நிறுவனங்களின் அறிக்கையின்படி சற்று அதிகரித்து காணப்படுகின்றது.
அவதானம்
இவ்வாறு காணப்படுவதனால் மக்கள் பொதுவாக அவதானமாக நடமாடுவது நல்லது. அதாவது அநாவசியமாக வெளியில் நடமாடாது உரிய பாதுகாப்புடன் நடமாடுவது விரும்பத்தக்கது. வெளியில் அநாசியமாக நடமாடுவதை குறைத்துக் கொள்வது மிக நல்லது.
அதேநேரம் நேற்று முதல் மழையுடனான காலநிலை காணப்படுவதனால் இந்த வளித்தட சுட்டெண் ஆனது கிடைக்கப்பெற்ற அறிகையின் படி குறைந்து சென்று சாதகமான நிலைக்கு செல்வதை காணக்கூடியதாக உள்ளது வேகமாக குறைவடைந்து சாதாரண ஒரு மட்டத்தை அடையும் என எதிர் பார்க்கப்படுகிறது இது தொடர்பில் மக்கள் பெரிதாக பயப்பட தேவையில்லை.
ஆனால் நோயாளிகள் வயதில் மூத்தவர்கள் சிறுவர்கள் அவதானமாக நடமாடி அநாவசியமாகவெளியில் செல்வதை தவித்துக் கொள்வது நல்லது
செய்தி : தீபன், கஜிந்தன்
