தென்கொரியா எல்லை அருகே வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி சோதனை - செய்திகளின் தொகுப்பு
தென்கொரியா எல்லை அருகே வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கோவிட் தொற்று காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வடகொரியா தொடர்ந்து இராணுவ திறனை வலுப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா வரை சென்று தாக்கும் வல்லமை படைத்த கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்தது உலக நாடுகளை அதிரவைத்தது.
அதன் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு அணுக் குண்டு சோதனையை நடத்த வடகொரியா தயாராகி வருவதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,