ட்ரம்பின் சந்திப்பு அழைப்பிற்கு வடகொரியா அமைதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அதற்கு வடகொரியா உடனடி ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இரு தலைவர்களுக்கும் இடையே சிறந்த தனிப்பட்ட உறவு நிலவியபோதிலும், பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளை வடகொரியா கடினமாக்கும் என்பதை இது உணர்த்துகின்றது.
தென்கொரியாவுடனான கூட்டுப் இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா திடீரெனக் குறைத்ததுடன், இந்த ஆண்டின் பிற்பகுதியில் கிம் ஜோங் உன்னைச் சந்திக்க எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
பேச்சுவார்த்தை
இருப்பினும், அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாதவரை இவ்வாறான சந்திப்புகள் நன்மையளிக்காது என வடகொரியத் தலைவரின் சகோதரியான கிம் யோ ஜாங் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான நல்உறவு நாட்டின் பாதுகாப்பு நலன்களிலோ அல்லது இராணுவத் திறன்களை வலுப்படுத்தும் முயற்சிகளிலோ எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என வடகொரியா தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கு அமெரிக்கா தன் மீதான விரோதப் போக்கைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கடும் நிபந்தனைகளை வடகொரியா முன்வைத்துள்ளது.