அமெரிக்காவை 33 வினாடிகளில் அழித்து விட முடியும்! சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை
வடகொரியாவிடமிருக்கும் அணு ஆயுதங்களால் அமெரிக்காவை 33 நிமிடங்களில் அழித்து விட முடியுமென சீன பாதுகாப்பு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஆபத்தான கணிப்பு
அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், சீனாவில் உள்ள ராணுவ பாதுகாப்பு விஞ்ஞானிகள் வடகொரியாவின் இராணுவ திறன்கள் குறித்து ஆபத்தான கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
ஜப்பான் எல்லையில், அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையை வடகொரியா சோதித்துப் பார்த்தது. அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு வலையமைப்பு இதுபோன்ற ஏவுகணைகளை இடைமறிக்கத் தவறினால், 1,997 வினாடிகளில் அமெரிக்காவைத் தாக்க முடியும் என சீன பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிற்கு எதிராக அச்சுறுத்தல்
அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் இராணுவப் பயிற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
மேலும் வட கொரியாவும் அமெரிக்காவிற்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுத்துள்ளது. கேள்விக்குரிய பாலிஸ்டிக் ஏவுகணை சமீபத்தில் ஜப்பான் எல்லைக்கு அருகே வடகொரியாவால் ஏவப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
