எந்தச் சேவையாக இருந்தாலும் அதை நேர்மையாக முன்னெடுக்க வேண்டும்! வடக்கு மாகாண ஆளுநர்
எந்தச் சேவையாக இருந்தாலும் அதை நேர்மையாகவும் - வெளிப்படைத்தன்மையாகவும் முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களில் நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது உரையில், பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்கின்றவர்களில் பெரும்பான்மையானோர் புத்தகப் பூச்சிகளாகவே இருக்கின்றனர். அவர்கள் சமூகத்துக்கும் உதவுவதில்லை.
புலமைப்பரிசில் நிதி
ஆனால் இன்று உங்களுக்கு கற்கின்ற காலம் முழுவதுக்கும் புலமைப்பரிசில் நிதியை வழங்குகின்றார்கள். அத்துடன் வெறுமனே நிதியை வழங்கிவிட்டுச் செல்லாமல், உங்களுக்கு தலைமைத்துவப் பயிற்சியையும் தந்திருக்கின்றார்கள்.
நிச்சயம் அது உங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். இப்போது கல்வி கற்றிருந்தால் மாத்திரம் போதாது. ஒவ்வொருவரும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவர்கள் உங்களுக்கு நிதியுதவியுடன் அந்தத் திறனை வளர்ப்பதற்கு ஏதுவான களத்தையும் ஏற்படுத்தித் தந்திருக்கின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா, உதவிப் பதிவாளர் ஜெயக்குமார், விஷன் குளோபல் எம்பவமன்ர் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி அன்ரனி ஜீவரட்ணம் மயூரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 13 மணி நேரம் முன்

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
