பிரபல கிரிக்கெட் வீரர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பிரபல கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரட்ன, பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு மீதவா நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
தனது பிள்ளையின் தந்தை பிரபல கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணரட்ன என தெரிவித்து விமான பணிப்பெண் என தன்னை கூறிக் கொள்ளும் பெண் ஒருவர் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த முனு இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது சாமிக்க கருணரத்னவை 10 லட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சாமிக்க கருணாரட்ன தன்னுடன் நெருங்கிப் பழகி ஏமாற்றி விட்டதாகவும், வழக்கு விசாரணைகளுக்கு முன்னிலையாவது இல்லை எனவும் குறித்த பெண் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
தனது பிள்ளைக்கு அவரது பெயரை பயன்படுத்துவதற்கு சாமிக்கு அனுமதி வழங்கவில்லை என குறித்த பெண் குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும் தமது கட்சிக்காரர் மீதான சகல குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக கிரிக்கெட் வீரர் சாமிக்கவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அசேல ரெகெவா தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் இந்திய பிரஜை ஒருவருடன் தொடர்பில் இருந்தார் எனவும் அது தொடர்பான புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.