வடக்கு - கிழக்கு ஆயர்கள் மன்றம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள்

Srilanka Covid Death
By Rakesh Aug 13, 2021 09:24 PM GMT
Report

அரசானது மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி, நாடு கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுபடவும், நாட்டில் சமத்துவமும் சமாதானமும் நிலவவும், நீதி கேட்டுப் போராடுபவர்களின் அடிப்படைக் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படவும் காத்திரமான முடிவுகளை எடுத்துச் செயற்பட வேண்டும் என சமகால சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு வடக்கு - கிழக்கு ஆயர்கள் மன்றத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகெங்கும் மக்கள் கொத்துக்கொத்தாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டும், இறுதியில் பல மில்லியன் கணக்கில் இறந்தும் உள்ளனர்.

இத்தகைய இக்கட்டான தருணத்தில் உலக மாந்தர் அனைவரும் இன, குல, சாதி, சமய, அரசியல் பேதங்களைக் கடந்து ஒரே இறைவனின் பிள்ளைகள் என்கிற உணர்வோடு ஒருமித்துச் செயற்பட அழைக்கப்பட்டுள்ளோம்.

இன்று உலகளவில் தொழிற்துறைகள் முற்றாகவோ, பாதியளவிலோ செயலிழந்துள்ளன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. மாணவர்களின் சுமுகமான பாடசாலைக் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக அவர்கள் மத்தியில் வெறுப்புணர்வு, பிடிப்பற்ற தன்மை, தனிமைப்படுத்தப்பட்ட சூழல் போன்ற உளவியல் தாக்கங்கள் தோன்றியுள்ளன.

மறுபக்கத்தில் முதியோரும், நீண்டகால தொற்று நோயினால் பாதிக்கப்பட்டோரும் தனிமைப்படுத்தலின் காரணமாக தமது எஞ்சிய நாட்கள் குறித்த அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இப்பெரும் போராட்டத்தின் மத்தியில் சுகாதார, மருவத்துப் பணியாளர்களின் அர்ப்பணம் நிறைந்த பணி மிகுந்த பாராட்டுதற்குரியது.

தங்களது இன்னுயிரையும் துச்சமென மதித்து, மிகுந்த அர்ப்பணிப்புடனும், சேவை மனங்பாங்குடனும் மருத்துவத் துறையினரும், சுகாதாரத் துறையினரும், முன்நிலைப் பணியாளர்களும், துப்பரவுப் பணியாளர்களும் பெருந்தொற்றிற்கு எதிரான போராட்டத்தில் கரம் கோர்த்துள்ளமையானது நமக்குப் புதிய நம்பிக்கையைத் தருகின்றது.

இவர்களுக்காக இடைவிடாது இறைவேண்டல் புரிவோம். எமது ஆதரவுக் கரத்தை அவர்கள் பால் நீட்டுவோம். இக்காலத்தில் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது நம் அனைவரினதும் தலையாய கடமையாகும்.

அரசும், சுகாதார அதிகாரிகளும் எமக்கு எடுத்துரைக்கும் வரை நாம் காலந்தாழ்த்தாது, அவதானத்துடனும், விழிப்புடனும் செயற்படுவோம். காலம் தாழ்த்தாது பரிந்துரைக்கப்படுகின்ற தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வோம்.

அத்தியாவசியத் தொடர்பாடல்களில் சமூக இடைவெளியைப் பேணுவோம். எப்போதும் முகக் கவசம் அணிவது, தொற்று நீக்கிகளைப் பயன்படுத்தியோ அல்லது கைகளுக்கு சவர்க்காரம் இட்டு எம்மையே நாம் சுத்தமாக வைத்திருப்பது, தேவையற்ற, வீனாண ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பது போன்ற செயற்பாடுகளை கைக்கொள்ள வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.

பொது முடக்கம் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் அற்ற சூழ்நிலைகளால் தேவையில் இருப்போருக்கு எமது தாராள உதவிகளை மனமுவந்து செய்வோம். தனித்தோ குழுவாகவோ தொடர்புகளை ஏற்படுத்தி ஆதரவின்றி இருக்கும் மக்களுக்கு உதவிடுவோம்.

வழமைபோல ஆலயங்களிலும் கோயில்களிலும் ஒன்றுகூடி வழிபாடுகளில் ஈடுபட முடியாவிட்டாலும் தனித்தோ குடும்பமாகவோ எமது ஆன்மீகத்தை ஆழப்படுத்த ஏதுவான காலமிது என்பதனை மறவாதிருப்போம்.

தனித்திருக்கும் அல்லது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காலங்களில் இறைவேண்டல், தியானம் போன்ற ஆன்மீகச் செயற்பாடுகளின் வாயிலாக இறைவனோடு ஒன்றித்து எமது ஆன்மீக வாழ்வினைப் பலப்படுத்திக் கொள்வோம்.

பொருளாதார ரீதியில் துயருறும் ஏழை மற்றும் நாளாந்தத் தொழில் புரியும் மக்களையும், நீதிகேட்டுப் போராடும் பல்வேறுபட்ட தரப்பினரின் நியாயமான கோரிக்கைகளையும் கருத்தில்கொண்டு, அரசானது மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி, நாடு கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுபடவும், நாட்டில் சமத்துவமும் சமாதானமும் நிலவவும், போராடும் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படவும் காத்திரமான முடிவுகளை எடுத்து செயற்பட வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.

நாமும் நம்பிக்கையோடு வாழ்ந்து அடுத்தவருக்கும் நம்பிக்கையை ஊட்டுவோம், விதைப்போம். இறைவன் தாமே எமது நட்டை எல்லா வகையான தீமைகளிலிருந்தும் விடுவித்து ஆசீர்வதிப்பாராக என்றுள்ளது.

மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US